சவூதி வேலைவாய்ப்பு சட்டம் நேர்மையான ஊழியர்களை பாதிக்காது
சவூதியில் புதிய வேலைவாய்ப்பு சட்டத்தை அமல்படுத்துவதால் நேர்மையான ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார்.
சவூதியில் புதிய வேலைவாய்ப்பு சட்டத்தை அமல்படுத்துவதால் நேர்மையான ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஜெர்மன் பயணம் மேற்கொண்ட அவர் பெர்லினில் கூறியது: புதிய வேலைவாய்ப்பு சட்டம் என்பது இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் பிற நாட்டவர்க்கும் பொருந்தும்.
வேலைவாய்ப்பு தேடி பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக சவூதியில் குடியேறியவர்களைத்தான் இந்த சட்டம் பாதிக்கும்.
சவூதியின் பொருளாதாரத்துக்கு இந்தியர்கள் அளிக்கும் பங்கு கணிசமானது. இதை அந்நாட்டு அரசு உணர்ந்துள்ளது. சட்ட விரோதமாக குடியேறியவர்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்றுவதால், பல உண்மையான பணியாளர்கள் அங்கு சென்று பணியாற்ற முடியும் என்றார்.
சவூதி அரசு "நிதாகத்' எனும் ஊழியர் பாகுபாடுச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த தொடங்கியிருக்கிறது. இதன்படி ஒரு நிறுவனத்தின் வேலைவாய்ப்பில் பத்து சதவீத அளவு சவூதி குடிமக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
மேலும் நிறுவனங்களை நடத்துபவர்களுக்கும் இச்சட்டத்தின் கீழ் கடுமையான விதிமுறைகள்
உள்ளன.
இந்த சட்டத்தினால் லட்சக் கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவர் என அஞ்சப்படுகிறது. இது குறித்துப் பேச வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி சவூதி செல்ல இருக்கிறார்.