முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒடிசாவில் லேசான நிலநடுக்கம்

ஒடிசா மாநிலம் புரி, கோர்தா மாவட்டங்களில் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:19 AM
பகிர்:

ஒடிசா மாநிலம் புரி, கோர்தா மாவட்டங்களில் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

புரி மாவட்டத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 என பதிவானது. செவ்வாய்க்கிழமை காலை 8.36 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், புவனேசுவரம் நிலவியல் ஆய்வு மையத்தில் இருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் மையம் கொண்டிருந்தது என்று புவனேசுவரம் வானிலை ஆய்வு மைய அதிகாரி எஸ்.சி.சாஹு தெரிவித்தார்.

புரி மாவட்டத்தில் அஸ்தரன் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் எனினும் கட்டடங்களுக்குச் சேதமோ எவருக்கும் காயமோ ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோர்தா மாவட்டம் நிராக்பூர் பகுதியிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.14 மணி

அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 2.9 என பதிவானது. இதில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று மாநில வருவாய்த் துறை கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.