முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலையில் தீ: அணைக்கும் பணியில் வனத்துறையினர் மும்முரம்

இங்கே மலைப் பகுதியில் அடிக்கடி தீப் பற்றுவதும், அவற்றை அணைப்பதும் வாடிக்கையாக இருந்தது.  இந்நிலையில், திருவண்ணாமலை மூலிகைகளைப் பாதுகாக்க வனத்துறை சார்பில் ஒரு குழு

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:22 AM
பகிர்:

திருவண்ணாமலை மலைப்பகுதியில் பற்றிய திடீர் தீயில் அரிய வகை மூலிகைகள் மரங்கள் எரிந்து சாம்பலாயின.

இங்கே மலைப் பகுதியில் அடிக்கடி தீப் பற்றுவதும், அவற்றை அணைப்பதும் வாடிக்கையாக இருந்தது.  இந்நிலையில், திருவண்ணாமலை மூலிகைகளைப் பாதுகாக்க வனத்துறை சார்பில் ஒரு குழு அமைத்து பாதுகாப்பு  மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன் பிறகு தீப் பற்றுவது வெகுவாகக் குறைந்தது.

இந்நிலையில், இன்று சுமார் ஒரு மணி அளவில் திருவண்ணாமலை வேலூர் சாலையில் உள்ள பச்சையம்மன் கோவில் அருகே தீ விபத்து ஏற்பட்டது. அதனை வனத்துறை ஊழியர்கள் பொதுமக்களுடன் ஒன்றிணைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.