பட்டாசு ஆலை மராமத்து பணியின் போது தீவிபத்து: இருவர் படுகாயம்
விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் மராமத்து பணிகள் மேற்கொண்டிருக்கும் போது கரிமருந்து உராய்வினால் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் தொழிலாளிகள் இருவர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் அருகே உள்ள குந்தலப்பட்டிக்கும்-
, ஏப்.20: விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் மராமத்து பணிகள் மேற்கொண்டிருக்கும் போது கரிமருந்து உராய்வினால் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் தொழிலாளிகள் இருவர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் அருகே உள்ள குந்தலப்பட்டிக்கும்-செங்குன்றாபுரத்துக்கும் இடையே கரிசல்காட்டு பகுதியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தற்போது மராமத்து பணிகள் நடந்து வருவதால் தொழிலாளர்கள் அறைகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல், சனிக்கிழமையும் தொழிலாளர்கள் பட்டாசு தயார் செய்யும் அறைகளை கடப்பாறை கம்பியால் இடிக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர். மாலையில் மருந்துக்குடோன் பக்கத்து அறையில் இடிக்கும் பணியை மேற்கொள்ளும் போது தரையில் மருந்து உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
இதில், அப்பணியில் ஈடுபட்டிருந்த முத்துலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(32) மற்றும் சிவகாசி அண்ணாநகரைச் சேர்ந்த கருப்பசாமி(22) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது தொடர்பாக ஆமத்தூரைச் சேர்ந்த ஆலையின் உரிமையாளர் தங்கராஜ், அதே பகுதியைச் சேர்ந்த மேலாளர் சிவகுமார் ஆகியோர் மீது ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.