கரிமருந்து திரி கடத்தியதாக 2 பேர் கைது: வாகனம் பறிமுதல்
விருதுநகர் அல்லம்பட்டி முக்குரோடு வழியாக பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கரிமருந்து திரிகளை தயார் செய்து கடத்துவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீஸார்
விருதுநகர் அருகே வாகனத்தில் கரிமருந்து திரி கடத்தியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
விருதுநகர் அல்லம்பட்டி முக்குரோடு வழியாக பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கரிமருந்து திரிகளை தயார் செய்து கடத்துவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் இன்று காலையில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை மறித்து போலீஸார் சோதனையிட்டனர். அதில், அனுமதி பெறாமல் தயார் செய்யப்பட்ட ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 2 ஆயிரம் கட்டுக்கள் வரையிலான கரிமருந்து திரிகள் இருந்தது.
உடனே இது தொடர்பாக வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் அருப்புக்கோட்டையில் தயார் செய்து சங்கரலிங்காபுரம் தனியார் பட்டாசு ஆலைக்கு கொண்டு செல்வதாக தகவல் தெரிவித்தனர். மேலும், இவர்கள் சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன்(35), டிரைவர் வெங்கடேஷ்(30) என்றும் விசாரணையில் தெரிவித்தனர். இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
Advertisement