முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் பசுமைத் தீர்ப்பாயக் குழு ஆய்வு

கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி ஆலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அது உறுதி செய்யப்பட்டு,

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:25 AM
பகிர்:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் இன்று காலை நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டது.

கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி ஆலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அது உறுதி செய்யப்பட்டு, மார்ச் மாதம் 30ம் தேதி ஆலை மூடப்பட்டது. பின்னர் ஆலையின் சார்பில் முறையீடு செய்யப்பட்டதை  அடுத்து, சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தின் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு இன்று காலை முதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் மேலாளர் சுமதி, பசுமைத் தீர்பாயத்தின் மோகன் உள்ளிட்ட மூவர் குழு இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இந்தக் குழு வரும் 29ம் தேதி சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தின் முன் தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.