தற்போதைய செய்திகள்

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் : வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு

சித்திரைத் திருவிழாவில் முத்திரைப் பதிக்கும் நிகழ்ச்சியாக மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாண வைபவம் இன்று காலை நடைபெற்றது.

ஜெயப்பாண்டி

சித்திரைத் திருவிழாவில் முத்திரைப் பதிக்கும் நிகழ்ச்சியாக மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாண வைபவம் இன்று காலை நடைபெற்றது.

திருக்கல்யாணத்தை அடுத்து இன்று இரவு பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், இறைவனும் மாசி வீதிகளில் வலம் வருகின்றனர்.

இதையடுத்து புதன்கிழமை காலை மாசி வீதிகளில்  தேரோட்டம் நடைபெறுகிறது. மேலும், அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர், இன்று மாலை புறப்பட்டு, புதன்கிழமை காலையில் மூன்று மாவடி அருகே வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையடுத்து 25ம் தேதி காலையில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது.

கள்ளழகர்  ஆற்றில் இறங்கும் வைபத்துக்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது மதுரை வைகை ஆற்றில் ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருக்கல்யாணத்தில் சிறப்பாக பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT