முகப்பு
தற்போதைய செய்திகள்

மரக்காணம் துப்பாக்கிச் சூடு: ராமதாஸ் கண்டனம்

மாமல்லபுரத்தில் வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்க வந்தவர்கள் மீது மரக்காணம் என்ற இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.இந்தத் தாக்குதலில் பாமகவைச்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:28 AM
பகிர்:

மரக்காணம் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-

மாமல்லபுரத்தில் வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்க வந்தவர்கள் மீது மரக்காணம் என்ற இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.இந்தத் தாக்குதலில் பாமகவைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.இது தவிர காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள்தான் காரணம்.இது தொடர்பாக முன்பே தகவல் தெரிந்தும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.இந்த வன்முறைகள் தொடர்பாகவும், இதைக் காவல்துறை கையாண்ட விதம் தொடர்பாகவும் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.எந்தத் தவறும் செய்யாத பாமகவினர் 1050 பேர் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →