மாணவன் தூக்கிட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிப்ஸ் கடை உரிமையாளர் முருகன். இவரது மகன் சுனில்குமார்(19). இவன் கடந்த 2012-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
கிருஷ்ணகிரி நகரில் மாணவர் ஒருவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிப்ஸ் கடை உரிமையாளர் முருகன். இவரது மகன் சுனில்குமார்(19). இவன் கடந்த 2012-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளான். ஆனால், மேற்கொண்டு தனது படிப்பை தொடராமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.யில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை அவரது தந்தை முருகன் செய்து வந்துள்ளார். அதற்காக நடைபெறவுள்ள நுழைவுத் தேர்விற்கு படிக்குமாறு பெற்றோர்கள் கூறியுள்ளனர். ஆனால், மேற்கொண்டு படிக்க விருப்பமின்றி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுனில்குமாரை அவரது பெற்றோர் திட்டினராம். இதனால் அவரது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.