முகப்பு
தற்போதைய செய்திகள்

செக் மோசடி வழக்கில் ஊராட்சித் தலைவர் சரண்

அருகேயுள்ள பெருங்கோட்டூரைச் சேர்ந்த பலவேசம் மகன் ராமநாதன்(41).இவரிடம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சுண்டங்கோட்டைச் சேர்ந்த ராஜகோபாலன் மகன் திவாகரன் ரூ.5 லட்சம் கடன்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:07 PM
பகிர்:

சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கில் ஊராட்சித் தலைவருக்கு பிடிவாரண்ட் அளித்ததைத் தொடர்ந்து ஊராட்சித் தலைவர் சரண் அடைந்தார்.

அருகேயுள்ள பெருங்கோட்டூரைச் சேர்ந்த பலவேசம் மகன் ராமநாதன்(41).இவரிடம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சுண்டங்கோட்டைச் சேர்ந்த ராஜகோபாலன் மகன் திவாகரன் ரூ.5 லட்சம் கடன் வாங்கினாராம்.அந்தப் பணத்திற்கு பதிலாக செக் கொடுத்தாராம்.அந்த செக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்துவிட்டாதாம்.இதனால் ராமநாதன் சங்கரன்கோவில் குற்றவியல்நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.

திவாகரன் பள்ளக்குறிச்சி ஊராட்சித் தலைவராக இருக்கிறார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜராகததால் நீதித்துறை நடுவர் முரளிதரகண்ணன், திவாகரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்திரவிட்டார்.இதைத்தொடர்ந்து திவாகரன் சங்கரன்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரண் அடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.