பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர் கைது
பழனி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர் கைது செய்யப்பட்டார்.
பழனி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர் கைது செய்யப்பட்டார்.
பழனி அருகே பெருமாள்புதூர் அய்யர் தோட்டத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மணிமயில்(32). உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக இதே ஊரை சேர்ந்த தண்டபாணி என்பவர் மீது ராதாகிருஷ்ணன் தரப்பில் கடந்த சிலதினம் முன் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ராதாகிருஷ்ணன் வெளியூருக்கு சென்றிருந்த போது அதே ஊரை சேர்ந்த நாகப்பன் மகன் தண்டபாணி(48) என்பவர் மணிமயிலிடம் என்மீது ஏன் புகார் செய்தாய் என தகராறு செய்துள்ளார். மேலும், அவரை ஆபாசமாக பேசி, தகாத முறையில் நடந்து கொண்டு கொலைமிரட்டலும் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து கணவர் ஊரில் இருந்து வந்த பின் பழனி தாலுகா காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மணிமயில் கொடுத்த புகாரின் பேரில் தண்டபாணியை கைது செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.