வீராணத்திலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு செல்வதை நிறுத்த விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை
விவசாயிகளின் நலன் கருதி இந்த ஆண்டு வீராணம்ஏரியிலிருந்து சென்னை நீர் கொண்டு செல்வதை தற்காலிக நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
விவசாயிகளின் நலன் கருதி இந்த ஆண்டு வீராணம்ஏரியிலிருந்து சென்னை நீர் கொண்டு செல்வதை தற்காலிக நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயற்குழுக்கூட்டம் சிதம்பரம் அறுபத்துமூவர் குருபூஜை மடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆ.அதியமான், நிர்வாகிகள் ரா.தமிழ்வளவன், ரத்தினவேல், க.ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு வரவேற்றார். பொறியாளர் அ.கலியபெருமாள், மையக்குழு உறுப்பினர் மு.வரதராசனார், மாநில நிர்வாகிகள் கோ.நீதிவளவன், ரா.காவியச்செல்வன், ரா.நெடுமாறன், செல்வமணி, கரிகால்வளவன், கலைமுதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில் ஆக.17-ம் தேதி நடைபெறவுள்ள திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது; அனைத்து ஆங்கிலப் பள்ளிகளிலும் அரசு நியமித்த கட்டணத்தை மட்டுமே வாங்க வேண்டும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோருவது; சிதம்பரத்தில் நந்தனார் பள்ளி வளாகத்தில் சுவாமி சகஜானந்தா மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனால் தற்போது அரசியல் குறுக்கீட்டால் பள்ளியின் வெளிப்புறத்தில் அணைக்கு முயற்திக்கு இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது; கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் மணல் அள்ளப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.