கீழணையிலிருந்து கொள்ளிடம் மற்றும் பாசனத்திற்கு நீர் திறப்பு!
கீழணையிலிருந்து கொள்ளிடத்தில் 94 ஆயிரம் கனஅடியும், பாசனத்திற்கு 3172 கனஅடியும் நீர் புதன்கிழமை திறந்து விடப்பட்டது. கீழணையிலிருந்து வடவாறு வழியாக வறண்டு போய் உள்ள வீராணம் ஏரிக்கு 2235
கீழணையிலிருந்து கொள்ளிடத்தில் 94 ஆயிரம் கனஅடியும், பாசனத்திற்கு 3172 கனஅடியும் நீர் புதன்கிழமை திறந்து விடப்பட்டது. கீழணையிலிருந்து வடவாறு வழியாக வறண்டு போய் உள்ள வீராணம் ஏரிக்கு 2235 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கல்லணையிலிருந்து கீழணைக்கு 1,14,200 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கீழணை நிரம்பி கொள்ளிடம் வழியாக கடலுக்கு 93,795 கனஅடிநீர் புதன்கிழமை திறந்து விடப்பட்டு வெளியேற்றப்படுகிறது. மேலும் கீழணையிலிருந்து வடவாறு வழியாக வறண்டு போய் உள்ள வீராணம்ஏரிக்கு 2235 கனஅடிநீரும், பாசன வாய்க்கால்களான வடக்குராஜன் வாய்க்காலில் 500 கனஅடி நீரும், தெற்குராஜன் வாய்க்காகில் 450 கன அடி நீரும், குமிக்கி மண்ணியாறில் 150 கனஅடி நீரும், இதர வாய்க்கால்களில் 150 கனஅடி நீரும் இன்று காலை திறக்கப்பட்டது.
கீழணையிலிருந்து வடவாற்றில் புதன்கிழமை காலை திறந்துவிடப்பட்ட நீர் மதியம் 1.30 மணிக்கு வீராணம்ஏரியின் முகப்பான ருத்ரசோலை மதகிற்கு வந்து சேர்ந்தது. இதனால் வீராணம்ஏரி சில தினங்களில் நிரம்பும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கீழணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் சம்பா சாகுபடியில் ஈடுபடவுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொள்ளிடத்தில் சுமார் 94 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் இன்று கொள்ளிடக்கரையோர கிராமங்களில் வெள்ள அபாயம் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். மேலும் 4 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.