முகப்பு
தற்போதைய செய்திகள்

குடிமகன்களினால் அண்ணாமலைநகரில் 25 மணி நேரம் மின்துண்டிப்பு

சிதம்பரம் அண்ணாமலைநகரில் குடிமகன்களின் செயலினால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இன்று பிற்பகல் வரை சுமார் 25 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:11 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைநகரில் குடிமகன்களின் செயலினால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இன்று பிற்பகல் வரை சுமார் 25 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சிதம்பரம் அண்ணாமலைநகர் மின்வாரியத்துக்கு உட்பட்ட அண்ணாமலைநகர், கொத்தங்குடி, மீதிகுடி, கோவிலாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. இதில் கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தையாநகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு மேல் சாலையோரம் உள்ளள காலிமனையில் மது அருந்திய சிலர் காலிபாட்டில்கள் மற்றும் உணவு கழிவுப் பொருட்களை ஒரு கேரி பேக்கில் போட்டு மேலே செல்லும் மின்கம்பி மற்றும் மின் கம்பத்தின் மீது வீசியுள்ளனர்.

இதனால் அண்ணாமலைநகர், முத்தையாநகர், சரஸ்வதி அம்மாள் நகர்,உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிகப்பட்டது. இதனை சரிசெய்ய  மின்வாரிய ஊழியர்கள் இரவு முழுவதும் முயற்சி மேற்கொண்டு கடும் மழையினால் சீரமைக்க முடியாமல் திரும்பினர். பின்னர் இன்று காலை பணியை தொடங்கி 25 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மின்கம்பி சீரமைக்கப்பட்டு இன்று மதியம் மின்சப்ளை வழங்கப்பட்டது. குடிகாரர்களின் இச்செயலால் வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உறங்க முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்னர். மேலும் இன்று காலை மோட்டார் மூலம் நீரேற்ற முடியாமல் அவதியுற்றனர்.

முத்தையாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் இரவு நேரங்களில் குடித்துவிட்டு சாலையில் பாட்டில்களை போட்டு உடைப்பது, போவோர், வருபவரிகளிடம் தகராறு செய்து பணத்தை பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே காவல்துறையினர் மேற்கண்ட பகுதிகளில் இரவு ரோந்து சென்று காலி மனை மற்றும் சாலையோரம் மதுஅருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

முழு கட்டுரையைப் படிக்க →