முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் குளங்கள் தூர்வாருவதற்கு தடை: பாரதிய யுவ பரிஷத் கண்டனம்

பாரதிய யுவ பரிஷத் அமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தெற்குரதவீதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாரதிய யுவ பரிஷத் தலைவர் ரவி தலைமை வகித்தார். இந்து ஆலய பாதுகாப்புக்குழு

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:11 PM
பகிர்:

சிதம்பரத்தில் குளங்கள் தூர் வாரும் பணி நிறுத்திய உதவிஆட்சியருக்கு பாரதிய யுவ பரிஷத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

பாரதிய யுவ பரிஷத் அமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தெற்குரதவீதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாரதிய யுவ பரிஷத் தலைவர் ரவி தலைமை வகித்தார். இந்து ஆலய பாதுகாப்புக்குழு பொதுச்செயலாளர் குருவாயூரப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். நிர்வாகிகள் குருமூர்த்தி, வினோத், இந்து முன்னணி சரவணன், பாலதண்டியுதபாணி, பிரபாகரன், ராமசேனாஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயலாளர் பார்த்தீபன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் தமிழகமுதல்வரின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் சிதம்பரத்தில் நடைபெற்று வந்த குளங்கள் தூர் வாரும் பணியை உரிய காரணமின்றி பாதியிலேயே நிறுத்திய உதவிஆட்சியர் (பொறுப்பு) பாதாளத்தை வண்மையாக கண்டிப்பது; சிதம்பரம் கோட்டத்திற்கு புதிய உதவிஆட்சியரை நியமிக்க வேண்டும்; சிதம்பரம் உதவிஆட்சியர் பொறுப்பு பணியில் உள்ள மாவட்ட பாதளாத்தை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →