முகப்பு
தற்போதைய செய்திகள்

கரும்பிற்கான காப்பீட்டுத் தொகையை ரொக்கமாக வழங்க விவசாயிகள் கோரிக்கை

கரும்பிற்கான காப்பீட்டுத் தொகையை விவசாயிகளின் வங்கி கடனில் வரவு வைக்காமல், ரொக்கமாக வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:47 AM
பகிர்:

கரும்பிற்கான காப்பீட்டுத் தொகையை விவசாயிகளின் வங்கி கடனில் வரவு வைக்காமல், ரொக்கமாக வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கே.ஆதிமூலம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

2011 நவம்பர் மாதம் கடலூர் மாவட்டத்தை தானே புயல் தாக்கிய போது கரும்பு, சவுக்கு, தென்னை உள்ளிட்ட இதர பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கரும்புக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் பேரூர் கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போதை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ, கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் முயற்சியால் கரும்புக்கு பயிர் காப்பீடு தொகை கிடைத்தது. கரும்பு விவசாயிகளுக்கு கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக ரூ.183,92,744 ரூபாயும், தேசிய வங்கிகள் மூலமாக சுமார் 5 கோடிக்கு காப்பீடுத்தொகை கிடைத்துள்ளது.

ஆனால் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வெளியிட்டுள்ள குறிப்பாணையில் காப்பீடு தொகை ரொக்கமாக வழங்கப்பட மாட்டாது. விவசாயிகள் பெற்ற வங்கி கடனில் வரவு வைக்க்கப்படும் என தெரிவித்துள்ளது. தற்போது வறட்சியால் சம்பா சாகுபடிக்கு மகசூலை பாதுகாக்க போர்வெல் மற்றும் புதிய மோட்டார், பைப்லைன் போட வேண்டிய செயலில் ஈடுபட்டு அவதிக்குள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு பணத்தை ரொக்கமாக வழங்க உத்தரவிட வேண்டும் என கே.ஆதிமூலம் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →