முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலை. எம்.டெக் (தொழிற்சாலை ஆபத்காப்பு பொறியியல்) படிப்பிற்கு தமிழகஅரசு அங்கீகாரம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வரும் எம்டெக் தொழற்சாலை ஆபத்காப்பு (M.Tech. Ind. Safety Engg) படிப்பிற்கு  தமிழகஅரசால் சமீபத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வரும் எம்டெக் தொழற்சாலை ஆபத்காப்பு (M.Tech. Ind. Safety Engg) படிப்பிற்கு  தமிழகஅரசால் சமீபத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிர்வாகம் வெளியிட்டு அறிக்கை: இந்த படிப்பை முடித்தவர்கள் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அதிகாரிகளாகவும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பையும் பெறுகிறார்கள். இப்படிப்பில் சேர விரும்பும் பொறியியல் பட்டதாரிகள் இதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழக அலுலகத்தில் பெற்று ஆக.20-ம் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என பதிவாளர் என்.பஞ்சநதம் தெரிவித்துள்ளார்.  

முழு கட்டுரையைப் படிக்க →