சிதம்பரம் தனியார் மருத்துவமனையில் பெண் சாவு: மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
சிதம்பரத்தில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் ஒருவர் இன்று இறந்தார். இதனையடுத்து சரியான சிகிச்சை அளிக்காததால் இறந்ததாக கூறி அதிமுகவினர் மற்றும் உறவினர்களும்
சிதம்பரத்தில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் ஒருவர் இன்று இறந்தார். இதனையடுத்து சரியான சிகிச்சை அளிக்காததால் இறந்ததாக கூறி அதிமுகவினர் மற்றும் உறவினர்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் கே.ஆர்.எம்.நகரை சேர்ந்த ஆறுமுகம். இவரது மனைவி சாந்தி (43). இவர் அண்ணாமலைநகர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவருக்கு கர்ப்பபை கோளாறு காரணமாக சிதம்பரம் விளங்கியம்மன்கோயில் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆக.10-ம் தேதி சேர்க்கப்பட்டார். அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பபை அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவமனையில் இருந்த சாந்தி இன்று திடீரென நெஞ்சுவலி வந்து இறந்ததாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த அதிமுகவினரும், உறவினர்களும் மருத்துவமனை முன்பு கூடி தவறான சிகிச்சையினால் இறந்ததாக கூறி முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து சென்று புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் கணவர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் நகர போலீஸார் வழக்குப் பதிந்து சாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.