தற்போதைய செய்திகள்

குற்றாலம் வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு

குற்றாலத்தில் திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவில் வாடகைதாரர்கள் மற்றும் குற்றாலம் வியாபாரிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

பா.​ பிரகாஷ்

குற்றாலத்தில் திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவில் வாடகைதாரர்கள் மற்றும் குற்றாலம் வியாபாரிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட காலிமனை மற்றும் கட்டடங்களில் குடியிருந்தும் வியாபாரம் செய்து வரும் வணிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய வாடகையை தவறாக நிர்ணயம் செய்ததை மறுபரிசீலனை செய்யவேண்டும், பணம் செலுத்த செல்லும் வணிகர்களிடம் கையெழுத்து மட்டும் பெற்று பின்பு தன் இஷ்டம்போல் எழுதுவதைக் கண்டித்தும், பொதுநடைபாதையில் பொதுமக்கள் மற்றும் உல்லாச பயணிகள் நடந்து செல்லும் வடக்கு சன்னதி, மற்றும் சன்னதி தெரு வழி பாதையில் தாற்காலிக கடைகள் அமைத்ததை கண்டித்தும் பொய்யான நிலையை உருவாக்கி மேல் அதிகாரிகளுக்கு தவறான தகவல் கொடுத்து வியாபாரிகள் மீது இந்து அறநிலையசட்டம் 78ன்படி போடப் பட்டிருக்கும் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

மேலும் இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை எனில், அனைத்துக் கட்சியினருடன் ஆலோசித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் மற்றும் மலையில் குடியேறும் போராட்டம் நடத்தப் போவதாக வர்த்தக சங்க தலைவர் பா.ராமையா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT