தற்போதைய செய்திகள்

விதை விற்பனை உரிமம் இன்றி விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதை அடுத்து விதைப்பு பணிகள் தொடங்க இருப்பதை அடுத்து விதை விற்பனை நிலையங்களில் உரிமம் பெறாமல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதை அடுத்து விதைப்பு பணிகள் தொடங்க இருப்பதை அடுத்து விதை விற்பனை நிலையங்களில் உரிமம் பெறாமல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநர் நாராயணபிரசாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் பரவலான மழையால் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக விதை ஆய்வு அலுவலர்கள் ஒவ்வொரு விற்பனை நிலையங்களிலும் குழு அமைத்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.எனவே விதைகள் கட்டுப்பாட்டு சட்டம் 1983 சட்டப்பிரிவு-3ன் படி உரிமம் பெறாதவர்கள் விதைகளை விற்பனை செய்வது கடும் குற்றமாகும். இதேபோல் விதை உரிமம் பெறாமல், வீடுகளில் அல்லது பொது இடங்களில் விற்பனை செய்வது தெரியவந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது அரசு விதிமுறைப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநர் நாராயணபிரசாத்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT