தற்போதைய செய்திகள்

விருதுநகரில் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் தீவிரச் சோதனை

விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ரயில் நிலையம், பஸ் நிலையம், ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீஸார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகரில் ரயில் ஸ்டேசன் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பயணிகள் மற்றும் வாகனங்களில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ரயில் நிலையம், பஸ் நிலையம், ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீஸார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ரயிலிலும் ஏறி பயணிகளின் உடைமைகள் மற்றும் பைகளிலும் அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் வகையில் வெடிகுண்டுகள் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்தனர். அதேபோல், ரயில் நிலையங்களுக்கு வழியனுப்புவதற்கு வந்து செல்கிறவர்களிடம் சோதனை செய்த பின்னரே பிளாட் பாரத்திற்குள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதேபோல், சுதந்திர தினவிழா நடைபெற இருக்கிற சூலக்கரை ஆயுதப்படை மைதானம், இம்மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்களிலும், முக்கிய வழிபாட்டு தலங்களான விருதுநகர் மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.மேலும், விருதுநகர் புறப்பகுதி 4 வழிச்சாலையில் உள்ள சத்தியரெட்டிபட்டி, சிவகாசி பாலம், ஆட்சியர் அலுவலகம், மாவட்ட விளையாட்டு அரங்கம், விருதுநகர்-அழகாபுரி சாலை உள்ளிட்ட இடங்களிலும் வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT