தற்போதைய செய்திகள்

சென்னையில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரசு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதோடு, நடிகர்கள் அனைவரும் முன்னோடியாக பின்பற்றி வருகின்றனர். சிவாஜிக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வரிடம் மணிமண்டபம்

எஸ். பாண்டியன்

நடிகர் சிவாஜிகணேசனை பற்றி வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் சென்னையில் அரசு சார்பில் மணிமண்படம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பேரவையின் தலைவர் கே.சந்திரசேகரன் தெரிவித்தார்.

இது குறித்து விருதுநகரில் நடிகர் சிவாஜி சமூக நல பேரவையின் மாநில தலைவர் கே.சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதோடு, நடிகர்கள் அனைவரும் முன்னோடியாக பின்பற்றி வருகின்றனர். சிவாஜிக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வரிடம் மணிமண்டபம் அமைப்பதற்காக இடம் ஒதுக்கி்த் தரவேண்டும் என அப்போது இருந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தனர்.அக்கோரிக்கையை ஏற்று கடந்த 26.9.2002ல் சென்னை அடையாறு பகுதியில் 65 சென்ட் இடத்தை அரசு ஒதுக்கீடு செய்தது. அந்த இடத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்தது. ஆனால், குறிப்பிட்ட இடத்தில் இச்சங்கத்தின் சார்பில் 21.4.2005ல் பூமிபூஜை நடத்தப்பட்டு 4 மாதங்களில் பணியும் முடியும் என அப்போதைய தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

இந்நிலையில் ஒவ்வொரு நினைவு நாள் வரும் போதும் அறிவிப்பு வெளியாகும் என சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். இதேபோல், கர்நாடாகவில் மறைந்த நடிகர் ராஜ்குமாருக்கு 6 மாதங்களில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைத்து நடிகர்களை கொண்டாடி வருகிறது. அதேபோல், தமிழகத்திலும் வருங்கால சந்ததியினர் அறி்ந்து கொள்ளும் வகையில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைப்பதற்கு முதல்வர் ஜெ.ஜெயலலிதா நடவடிக்கை எடு்க்க வேண்டும் என சிவாஜி சமூக நலப்பேரவையின் மாநிலத் தலைவர் கே.சந்திரசேகரன் தெரிவித்தார். அப்போது உடன் வடசென்னை மாவட்ட சமூக நலப்பேரவையின் மாவட்ட தலைவர் இ.சங்குராஜன், பொதுச்செயலாளர் ஜே.சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சாத்தூர் நகர செயலாளர் டி.எஸ்.அய்யப்பன் உள்ளிட்டோர் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT