தற்போதைய செய்திகள்

தலைமையாசிரியை கணவரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் அருகே மாத்தநாயக்கன்பட்டி பவித்ரா நகரைச் சேர்ந்தவர் அற்புதராஜ்(60). இவரை விருதுநகர் அண்ணாமலைச்செட்டியார் தெருவை சேர்ந்த அண்ணாத்துரை(40) மற்றும் மணிகண்டன்(35) ஆகியோர் ரூ.5

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தலைமயாசிரியையின் கணவரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மோசடி செய்த இருவர் மீது சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே மாத்தநாயக்கன்பட்டி பவித்ரா நகரைச் சேர்ந்தவர் அற்புதராஜ்(60). இவரை விருதுநகர் அண்ணாமலைச்செட்டியார் தெருவை சேர்ந்த அண்ணாத்துரை(40) மற்றும் மணிகண்டன்(35) ஆகியோர் ரூ.5 லட்சம் வங்கியில் எளிதாக கடன் பெற்றுத் தருவதாக அணுகியுள்ளனர். அதற்கு, நிரப்பப்படாத தலா ரூ.1 லட்சம் வீதம் 5 காசோலைகளை கையொப்பம் இட்டு வங்கியின் கடன் பாதுகாப்புக்காக வழங்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு, என்னுடைய மனைவி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். அவருடைய கணக்கிற்கு கடன் தொகை வரவு வைக்கும் படி கூறி காசோலைகளையும் அளித்துள்ளார்.

அதையடுத்து, அற்புதராஜ் கொடுத்த காசோலைகளில் ரூ.5 லட்சம் நிரப்பி வங்கியில் கொடுத்துள்ளனர். பணம் இல்லையென திரும்பி வந்துள்ளது. பின்னர் இது தொடர்பாக கடன் தொகையை வாங்கி விட்டு அதற்கு பதிலாக பணம் இல்லாத காசோலைகளை கொடுத்ததாக கூறி வழக்கறிஞர் மூலம் மேற்குறிப்பிட்ட இருவரும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதையறிந்த அற்புதராஜ் அதிர்ச்சி அடைந்தார். அதையடுத்து இது குறித்து சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அண்ணாத்துரை மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT