முகப்பு
தற்போதைய செய்திகள்

நாளை சிதம்பரத்தில் காயத்திரி ஜபம், காயத்திரி ஹோமம்!

சிதம்பரம் காயத்திரி அம்மன் கோயில் தெருவில் பழமை வாய்ந்த வேத மாதா காயத்திரி ஆலயம் அமைத்துள்ளது. இக்கோயிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு ஆக.19-ம் தேதி உற்சவம் தொடங்கி

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:19 PM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீகாயத்திரி அம்மன் கோயிலில் நாளை(புதன்கிழமை) காயத்திரி ஜபம் மற்றும் ஹோமம் நடைபெறுகிறது.

சிதம்பரம் காயத்திரி அம்மன் கோயில் தெருவில் பழமை வாய்ந்த வேத மாதா காயத்திரி ஆலயம் அமைத்துள்ளது. இக்கோயிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு ஆக.19-ம் தேதி உற்சவம் தொடங்கி புதன்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மூன்று நாட்களும் ஸ்ரீ காயத்ரி அம்மன்கோயிலில் பகல், இரவு இருவேளைகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், இரவு அம்மன் வீதிஉலா உற்சவமும் நடைபெற்று வருகிறது. நாளை (21-08-2013) ஸ்ரீ காயத்ரி ஜபத்தை முன்னிட்டு ஸ்ரீ காயத்ரி ஜபமும், ஸ்ரீ காயத்ரி மந்திர ஹோமமும் நடைபெறுகிறது. வேத ஆரம்பம் செய்த நாளை காயத்ரி மந்திரத்தை சுமார் (1008) உரு ஜபம் செய்வது முக்கியமான ஒன்றாகும். மன அமைதி பெற காயத்ரி மந்திர ஜபம் செய்யவேண்டும் என்பது ஐதீகம் என உ.நடராஜ தீட்சிதர் தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →