மானாமதுரை அருகே தலித் வீடுகள் இடிப்பு: மார்க்சிஸ்ட் கண்டனம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், சிறுகுடி ஊராட்சிக்குட்பட்ட பாப்பாங்குளம் கிராமத்தில் சுமார் 100 தலித் குடும்பங்கள் உள்ளன. தங்களுக்கு வாக்களிக்கவில்லை எனக்கூறி இவர்களை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தலித் மக்களின் வீடுகளை இடித்தவர்களை கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், சிறுகுடி ஊராட்சிக்குட்பட்ட பாப்பாங்குளம் கிராமத்தில் சுமார் 100 தலித் குடும்பங்கள் உள்ளன. தங்களுக்கு வாக்களிக்கவில்லை எனக்கூறி இவர்களை சிறுகுடி ஊராட்சித் தலைவரின் கணவர் தங்கராஜ் மிரட்டி வந்துள்ளார்.தனக்கு வாக்களிக்காத மக்களை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்பதற்காக சுதந்திர தினமான கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் 24 தலித் மக்களின் வீடுகளை தங்கராஜ் இடித்து தரைமட்டமாக்கியுள்ளார். இதனால் ரூ. 1 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்துக்கும் பட்டா, மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களும் உள்ளன. இதில் மூன்று வீடுகள் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டவை.
Advertisement
தலித் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டபோது மானாமதுரை சரக காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் 10-க்கும் அதிகமான போலீஸார் இருந்துள்ளனர்.வீடுகள் இடிப்பதை தட்டிக் கேட்ட கள்ளிவயல் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டினை கைது செய்ததோடு, அவர் மீது பொய் வழக்கு தொடுத்துள்ளனர்.சுதந்திர தினத்தன்று தலித்களின் வீடுகள இடித்த தங்கராஜ், பாதுகாப்பு வழங்கிய போலீஸ் அதிகாரி வெள்ளத்துரை மற்றும் குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமும், இழப்பீடும் வழங்க வேண்டும் என ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.