முகப்பு
தற்போதைய செய்திகள்

குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஆட்சியருக்கு கிராமமக்கள் மனு!

அந்த மனுவில் எங்களது கிராமத்தில் சுமார் 600 வீடுகள் உள்ளது. தற்போது 3 மாத காலமாக குடிநீர் உப்புநீராக மாறிவிட்டது. இதனால் அடிக்கடை வயிற்றுப் போக்கு ஏற்பட்டும், உடல்நலம் பாதிக்கப்பட்டு

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:19 PM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி மற்றும் மடப்புரம் கிராம பொதுமக்கள் தங்களது ஊருக்கு புதிய போர்வெல் அமைத்து குடிநீர் வசதி செய்து தரக்கோரி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

அந்த மனுவில் எங்களது கிராமத்தில் சுமார் 600 வீடுகள் உள்ளது. தற்போது 3 மாத காலமாக குடிநீர் உப்புநீராக மாறிவிட்டது. இதனால் அடிக்கடை வயிற்றுப் போக்கு ஏற்பட்டும், உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறோம். நாங்கள் தினமும் குடிநீருக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீரை குடங்களில் பிடித்து வருகிறோம். எனவே எங்களது கிராமத்தில் தற்காலிக கைபம்பு மூலம் மின்மோட்டார் அமைத்து ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட இரண்டு குடிநீர் தொட்டிகள் அமைத்து தர வேண்டும். மேலும் நிரந்திரமாக எங்களது கிராமத்தில் மாற்று இடத்தில் புதிய போர்வெல் அமைத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என மனுவில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →