கோயில் விழாவில் கஞ்சி குடித்த 150 பேருக்கு வாந்தி, பேதி: கிராமத்தில் முகாமிட்டுள்ள சிகிச்சை அளிக்கும் மருத்துவக்குழுவினர்
காட்டுமன்னார்கோயில் அருகே ஓம்சக்தி கோயில் விழாவில் செவ்வாய்க்கிழமை இரவு கஞ்சி குடித்த 150 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. கிராமத்தில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து
காட்டுமன்னார்கோயில் அருகே ஓம்சக்தி கோயில் விழாவில் செவ்வாய்க்கிழமை இரவு கஞ்சி குடித்த 150 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. கிராமத்தில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். 50 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கஞ்சங்கொல்லை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஓம்சக்தி கோயில் விழாவில் கஞ்சி கலயம் ஊர்வலம் நடைபெற்று அனைவருக்கு கஞ்சி ஊற்றப்பட்டது. இவ்விழாவில் கஞ்சி குடித்த சுமார் 150 பேருக்கு திடீரென செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
தகவல் அறிந்த கடலூர் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் ஜவகர்லால்பாபு, வட்டாட்சியர் வெங்கடாசலம் ஆகியோர் அக்கிராமத்திற்கு சென்று உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் சிவானந்தம் தலைமையில் மருத்துவக்குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு அனைவருக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இத்திருவிழாவில் பங்கேற்று கஞ்சி குடித்த வாந்தி, பேதி ஏற்பட்ட அரியலூர் மாவட்டம் வானவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.