திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி : மாணவர்கள் மகிழ்ச்சி
திருவண்ணாமலையில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் இன்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார். இதையடுத்து, அக்கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று திருவண்ணாமலை அரசு கல்லூரி துவக்குவதை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆ. ஞானசேகரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் 85 இடங்கள் தமிழக ஒதுக்கீடுக்கு அளிக்கப்பட்டது. அதில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
கல்லூரிக்கு கூடுதல் இடங்கள் கிடைத்ததால்தான் தங்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது என்றும், அதிலும், அவர்களது பகுதிக்கு அருகிலேயே அரசு கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.