லாரியை மடக்கி மாமூல் வசூலித்தவர் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம்-மாதர்பாக்கம் கூட்டுச் சாலையில் லாரிகளை மடக்கி மாமூல் வசூலித்த சரவணன்(35) வெள்ளியன்று ஆரம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போதைய செய்திகள்லாரியை மடக்கி மாமூல் வசூலித்தவர் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம்-மாதர்பாக்கம் கூட்டுச் சாலையில் லாரிகளை மடக்கி மாமூல் வசூலித்த சரவணன்(35) வெள்ளியன்று ஆரம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம்-மாதர்பாக்கம் கூட்டுச் சாலையில் லாரிகளை மடக்கி மாமூல் வசூலித்த சரவணன்(35) வெள்ளியன்று ஆரம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி முனுசாமி நகரை சேர்ந்த சிவலிங்கம் மகன் சரவணன். இவர் ஆரம்பாக்கம்-மாதர்பாக்கம் சாலையில் லாரிகளை மடக்கி மாமூல் வசூலித்துள்ளார். இந்நிலையில் அவ்வழியே வந்த லாரியை மடக்கி லாரி டிரைவரான திருவள்ளூர் பெரியகுப்பத்தை சேர்ந்த முருகன்(40) என்பவரிடம் மாமூலாக ரூபாய்500 கேட்டு இருக்கிறார்.
டிரைவர் முருகன் மாமூல் தர மறுக்கவே அவரை சரவணன் மிரட்டிய நிலையில் முருகன் அவருக்கு ரூபாய் 300 தந்து விட்டு ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம்
சம்பவ இடம் விரைந்து சரவணனை கைது செய்து காவல் நிலையத்தில் விசாரித்தனர். தொடர்ந்து முருகன் அளித்த புகாரின் பேரில் சரவணன் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.