முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆதித்தமிழர் பேரவை அதியமான் மீதுசங்கரன்கோவிலில் 5 வழக்குகள் பதிவு

சங்கரன்கோவில் அருகேயுள்ள நெல்கட்டும்செவல்-பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு நாள் கடந்த 20ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது. அன்று  அதிமுக,விடுதலைச் சிறுத்தைகள்,ஆதித்தமிழர் பேரவை,தமிழ்புலிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள்,தொண்டர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:21 PM
பகிர்:

ஆதித்தமிழர் பேரவைத் நிறுவனர் அதியமான் மீது சங்கரன்கோவில் பகுதியில் உள்ள 4 காவல்நிலையங்களில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் அருகேயுள்ள நெல்கட்டும்செவல்-பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு நாள் கடந்த 20ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது. அன்று  அதிமுக,விடுதலைச் சிறுத்தைகள்,ஆதித்தமிழர் பேரவை,தமிழ்புலிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள்,தொண்டர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது ஆதித்தமிழர் பேரவை சார்பில் அதன் நிறுவனர் அதியமான் சங்கரன்கோவில் வழியாக பச்சேரி கிராமத்திற்கு சென்றார்.முன்னதாக அதியமானும் அவருடன் சுமார் 48 கார்களில் வந்தவர்களும் சங்கரன்கோவில் திருநெல்வேலிசாலையில் தேவாலயம் அருகே வந்தபோது, பிற மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பிரதான சாலைகளில் கோஷங்கள் எழுப்பிச் சென்றதாகவும் கூறி நகர காவல்நிலையப் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

இதேபோல் கரிவலம்வந்தநல்லூர் காவல்நிலையத்தில் அதியமான் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னகோவிலான்குளம் காவல்நிலையம்,தாலுகா காவல்நிலையம் உள்ளிட்ட காவல்நிலையங்களிலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுவரை மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.