தற்போதைய செய்திகள்

தென்காசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை

தென்காசியை அடுத்த மேலகரம் பாரதிநகரில் வசிப்பவர் வெங்கடேஷ் (44). இவர் கத்தார் நாட்டின் கெமிக்கல் இஞ்சினியரிங் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார்.

பா.​ பிரகாஷ்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

தென்காசியை அடுத்த மேலகரம் பாரதிநகரில் வசிப்பவர் வெங்கடேஷ் (44). இவர் கத்தார் நாட்டின் கெமிக்கல் இஞ்சினியரிங் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார்.

இந்நிலையில் ஊருக்கு வந்திருந்த அவர், வீட்டைப் பூட்டிவிட்டு, கொடைக்கானல், ஊட்டி சென்றார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ. 19 ஆயிரம் மதிப்புள்ள கத்தார் ரியால் உள்ளிட்ட  வெளிநாட்டு கரன்ஸிகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT