முகப்பு
தற்போதைய செய்திகள்

வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்று திறந்து வைத்தனர்

சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரியிலிருந்து தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை பாசனத்திற்கு நீர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:24 PM
பகிர்:

சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரியிலிருந்து தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் இன்று பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் 44,856 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது.

காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததாலும், கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டியை நீரை தராததாலும் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. மேலும் கடந்த மூன்று மாதகாலமாக ஏரி, குளங்கள், ஆறுகள், வடிகால் வாய்க்கால்கள் வறண்டு போயின. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரி முற்றிலும் வறண்டு போனது. இதனால் ஏப்ரல் 27-ம் தேதி முதல் புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு கர்நாடகாவிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரியில் நீர் திறக்கப்பட்டு கீழணையிலிருந்து வடவாறு மூலமாக வீராணத்திற்கு நீர் அனுப்பட்டது. வறண்டு போய் இருந்த வீராணம்ஏரி நிரம்பியதால் மீண்டும் சென்னை குடிநீருக்கு ஆக.17-ம் தேதி முதல் நீர் அனுப்பும் பணி தொடங்கியது. தற்போது செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 46.50 அடியை (1197 மில்லியன் கனஅடி) எட்டியது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 (1465 மில்லியன் கனஅடி) அடியாகும். வீராணம்ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக விநாடிக்கு 91 கனஅடி அனுப்பப்படுகிறது. ஏரியியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு விநாடிக்கு 71 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் சம்பா சாகுபடிக்கு (ஆக.27)- செவ்வாய்க்கிழமை பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டது. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் ஏரியிலிருந்து ராதாமதகிலிருந்து 10 கனஅடியும், வீராணம் புதிய மதகிலிருந்து 100 கனஅடி நீரையும் திறந்துவிட்டனர். இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்), செல்விராமஜெயம் (புவனகிரி), பொதுப்பணித்துறை தலைமை  பொறியாளர் ஏம்ராஜ், கண்காணிப்பு பொறியாளர் வி.சண்முகம், கொள்ளிடம் வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, உதவிப் பொறியாளர் உமா, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பி.ரவீந்திரன், கே.வி.இளங்கீரன், விஜயகுமார், ரங்கநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →