முகப்பு
தற்போதைய செய்திகள்

லால்குடி பகுதியில் நேற்று இரவு 3 வீடுகளில் திருட்டு: 15 சவரன் நகை மற்றும் 25 ஆயிரம் பணம் கொள்ளை

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் 3 வீடுகளில் புகுந்து 15 சவரன் நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:04 PM
பகிர்:

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் 3 வீடுகளில் புகுந்து 15 சவரன் நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:- திருச்சி லால்குடி திருவள்ளூவர் நகரைச்சேர்ந்த அப்துல் அஜித் (56) என்பவர் நேற்று தன் வீட்டை பூட்டி விட்டு பெரம்பலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். காலையில் வந்து பார்க்கும் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

மேலும் பீரோவை உடைத்து 10 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளது.தெரியவந்தது.  இதேபோல்  அதே பகுதியைச்சேர்ந்த பாலாஜி நகர் நெபோலியன் என்பவர் வீட்டிலும் பீரோ உடைக்கப்பட்டு 2 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவர் கம்யூட்டர் சென்டர் நடத்திவருபவர். சம்பவத்தன்று தன் அம்மா விட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நெப்போலியனின் பக்கத்து வீட்டில் உள்ள பழனிச் சாமி என்பவர் வீட்டிலும்  பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை, வெள்ளிக் கொலுசு, போன்றவை திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லால்குடி டி.எஸ்.பி. மற்றும் கைரேகை நிபுணர்கள் சமப்வ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →