சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது. மதியம் 12 மணி நிலவரப்படி 43% வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுவரை நடந்த தேர்தல்களிலேயே 12 மணிக்கு 43% வாக்குகள் பதிவாகியிருப்பது இதுவே முதல் முறை என்றும், இது மிகவும் அதிகமான வாக்குப்பதிவு என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் மறைந்த பெருமாளின் மனைவி பெ.சரோஜாவும், திமுக சார்பில் வெ.மாறனும் போட்டியிடுகின்றனர்.
இவர்களுடன் 9 சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் உள்ளனர்.
நோட்டா' வசதி: யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக வாக்குப் பதிவு இயந்திரத்தில் "நோட்டா' பொத்தான் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்காடு தொகுதி முழுவதிலும் 120 மையங்களில் 290 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.