முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் விவசாயிகள் மறியல்: 42 பேர் கைது

சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட 42 விவசாயிகள் நகர போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:07 PM
பகிர்:

சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட 42 விவசாயிகள் நகர போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கோமாரி நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாத்திட வேண்டும், கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 12 மணி நேரம் தொடர் மின்வெட்டை கண்டிப்பது, விவசாயத்திற்கு தேவையான மின்சாரத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்திசிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கோ.மாதவன் தலைமை வகித்தார். அமைப்பாளர் ஆர்.சதானந்தம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பி.கற்பனைச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் பங்கேற்ற 42 பேரை சிதம்பரம் நகர போலீஸார் கைது செய்து மாலை விடுவித்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments