முகப்பு
தற்போதைய செய்திகள்

செல்போன் பேச்சினால் கவனச் சிதறல்: தவறி கிணற்றுக்குள் விழுந்த கல்லூரி மாணவி

விருத்தாசலம், அன்பு நகர் சம்பந்தம் மகள் கீர்த்திகா (20). விருத்தாசலம் அரசு கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாமாண்டு படிக்கிறார். இவர், வியாழக்கிழமை மாலை வீட்டு பின்புறம் உள்ள கிணற்று கட்டையில்

Updated On : 6 டிசம்பர், 2013 at 2:39 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:38 AM

கிணற்றின் அருகில் இருந்து செல்போன் பேசிக்கொண்டிருந்தபோது, தவறி கிணற்றுக்குள் விழுந்த கல்லூரி மாணவியை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

விருத்தாசலம், அன்பு நகர் சம்பந்தம் மகள் கீர்த்திகா (20). விருத்தாசலம் அரசு கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாமாண்டு படிக்கிறார். இவர், வியாழக்கிழமை மாலை வீட்டு பின்புறம் உள்ள கிணற்று கட்டையில் அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தவறி 60 அடி ஆழமுள்ள கிணற்றில் செல்போனுடன் விழுந்தார்.

கிணற்றுக்குள் தத்தளித்த அவரை, விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனுவாசன் தலைமையிலான வீரர்கள், மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.