தற்போதைய செய்திகள்

2016-ல் தமிழகத்தில் பாமக ஆட்சி: ராமதாஸ்

வரும் 2016-ம் ஆண்டில் தமிழகத்தில் பாமக ஆட்சியமைக்கும். அப்போது கல்வி, மருத்துவம், விவசாய இடுபொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். நாட்டின் வளப்படுத்தும் சக்தியாக உள்ள

பெ. விஜயபாஸ்கர்

வரும் 2016-ல் தமிழகத்தில் பாமக ஆட்சியமைக்கும் என்றார் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

கடலூர் அருகே பச்சையாங்குப்பத்தில் கட்சி நிர்வாகி ஒருவரின் தொழில் நிறுவனத்தை வெள்ளிக்கிழமை காலை திறந்துவைத்து அவர் பேசியதாவது:-

வரும் 2016-ம் ஆண்டில் தமிழகத்தில் பாமக ஆட்சியமைக்கும். அப்போது கல்வி, மருத்துவம், விவசாய இடுபொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். நாட்டின் வளப்படுத்தும் சக்தியாக உள்ள இளைஞர்கள் பலர்,  தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நிற்கின்றனர். இந்த நிலை மாற டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்கிறோம். இதற்கான போராட்டங்கள் தொடரும்.

ஸ்பெக்டரம் ஊழலை காட்டிலும், மிகப்பெரிய ஊழலாக தமிழக ஆறுகளில் நடந்துள்ள மணல் கொள்ளை உள்ளது. தனியாரிடம் வழங்கப்பட்டதால் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும் மணல் குவாரிகளை முழுமையாக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT