தற்போதைய செய்திகள்

அடையாள அட்டை, குடும்ப அட்டைகள் உள்ளிட்டவைகள் வழங்க வலியுறுத்தி திருநங்கைகள் முற்றுகை

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளோம். நாங்கள் தொண்டு நிறுவனத்தின் உதவியோடு, திருநங்கைகளுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களை முயற்சி செய்து

எஸ். பாண்டியன்

அடையாள அட்டை, குடும்ப அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை உடனே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருநங்கைகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து திருநங்கைகளின் சார்பில் திருநங்கைகள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் புவனாமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமியிடம் அளித்த  மனுவில் தெரிவித்துள்ளதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளோம். நாங்கள் தொண்டு நிறுவனத்தின் உதவியோடு, திருநங்கைகளுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களை முயற்சி செய்து குறைந்த அளவிலேயே பெற்று வருகிறோம். இதுவரையில் எங்கள் சங்கம் சார்பில் திருநங்கைகள் அடையாள அட்டை, ரேசன் கார்டு, இலவச வீட்டுமனைப்பட்டா, இலவச வீடு, உதவித் தொகை, மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, உழவர் அட்டை, விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மற்றும் விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் உள்ளிட்டவைகளும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமியிடம் நேரில் அளித்த   மனுவில் தெரிவித்துள்ளனர்.

மேலும், இக்கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக் கோரியும் ஆட்சியர் அலுலகம் முன்பு முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீஸார் சமரசம் செய்து வைத்தனர். அதையடுத்து திருநங்கைகள் 50-க்கும் மேற்பட்டோ கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT