தற்போதைய செய்திகள்

அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மூடப்பட்ட செவிலியர் பயிற்சி நிலையங்களை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில்

எஸ். பாண்டியன்

மூடப்பட்ட செவிலியர் பயிற்சி நிலையங்களை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இணைச் செயலாளர் வி.ரூபசௌந்தரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜி.சந்தனமாரி முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் எஸ்.அந்தோணியம்மாள் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில், துணை சுகாதார நிலையங்களில் ஸ்டாப் நர்சுகளை நியமனம் செய்யக் கூடாது. கிராம சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் போதிய அளவில் இல்லை, அதனால் சங்க கோரிக்கையினை அரசு ஏற்றுக்கொண்ட படி வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும். பகுதி நேர சுகாதார செவிலியர்களின் தர ஊதியத்தை உயர்த்தி வழங்குவதோடு, ஒவ்வொருவருக்கும் மடிக்கணினியும் வழங்க வேண்டும். பெண் ஊழியர்கள் என்பதால் கூடுதலான பணிகளைத் திணிப்பதை கைவிடவும் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மாவட்ட தலைவர் எஸ்.தமயந்தி, மாவட்ட தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட செயலாளர் வி.அமுதா மற்றும் விருதுநகர், சிவகாசி சுகாதார மாவட்ட  நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT