தற்போதைய செய்திகள்

உதவி வேளாண்மை அலுவலர் பணிக்காலியிடத்திற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி வேளாண்மை அலுவலர் பணிக்காலியிடத்திற்கு தகுதியானவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

எஸ். பாண்டியன்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி வேளாண்மை அலுவலர் பணிக்காலியிடத்திற்கு தகுதியானவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.

இது குறித்து செவ்வாய்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உதவி வேளாண்மை அலுவலர் பணி காலியாக உள்ளது. இப்பணியிடத்திற்கு பிளஸ்2 தேர்ச்சி பெற்று, வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும்  திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தால் அங்கிகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் இரண்டு வருட வேளாண்மை பட்டாயச் சான்று பெற்றிருப்பது அவசியம் ஆகும்.

அதோடு, 31.8.2013 அன்றைய நாளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியினர் ஆகியோருக்கு 18 வயது முதல் 35 வயது வரையில் இருக்க வேண்டும். அதேபோல், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 18 வயது முதல் 30 வயது வரையில் இருக்க வேண்டும்.பதிவு மூப்பு: இப்பணியிடத்திற்கு ஆதிதிராவிடர்(பொது)-2.8.1996 வரையும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்(பொது) 3.2.1997 வரையும், பிற்படுத்தப்பட்டோர்(பொது)-13.1.1995 வரையும், பிற்படுத்தப்பட்டோர் (பெண்கள்)-11.9.2001 வரையும், பொது பிரிவினர் (பெண்கள்)-1.7.2002 வரையும், பொது பிரிவினர் 28.11.1996 வரையில் இருக்க வேண்டும்.

எனவே மேற்குறிப்பிட்ட பதிவு மூப்பு மற்றும் வயது வரம்புக்கு உள்பட்ட பதிவுதாரர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு விவரங்களை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13-ம் தேதி காலை 11 மணிக்கு வந்து சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகின்றவர்களின் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி தெரிவித்துள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT