முகப்பு
தற்போதைய செய்திகள்

ரஜினிக்கு பாஜக பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் தனது 64-வது பிறந்த நாளை வியாழக்கிழமை (டிச. 12) கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு

Updated On : 11 டிசம்பர், 2013 at 7:25 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:42 AM

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது 64-வது பிறந்த நாளை வியாழக்கிழமை (டிச. 12) கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக ரஜினியை பிரசாரம் செய்ய வைக்க அக்கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பொன். ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "64-வது பிறந்த நாள் காணும் ரஜினிகாந்த், நீண்ட ஆயுள், நிரந்த ஆரோக்கியம் உள்ளிட்ட எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ அன்னை பராசக்தியை வேண்டுகிறேன். சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் துயரத்தை உணர்ந்த அவர், எதிர்காலத்தில் மக்கள் பணியாற்ற அன்னை பராசக்தி அருள்புரிய வேண்டும்' என  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.