முகப்பு
தற்போதைய செய்திகள்

'ஆம் ஆத்மி' கட்சிக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கம் பாராட்டு!

வாக்காளர்களை லஞ்சம் வாங்குபவர்களாக மாற்றி வைத்திருந்த அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் லஞ்சம் கொடுக்காமல் புதுதில்லியில் 28 இடங்களில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்கம் பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

வாக்காளர்களை லஞ்சம் வாங்குபவர்களாக மாற்றி வைத்திருந்த அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் லஞ்சம் கொடுக்காமல் புதுதில்லியில் 28 இடங்களில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்கம் பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஊழல் எதி்ர்ப்பு இயக்க சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் அ.குணசேகரன் அனுப்பியுள்ள கடிதம்: இந்திய வரலாற்றில் கட்சி தொடங்கி 9 மாதங்களில் 31 சதவீத வாக்குகளை பெற்று புதுதில்லியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி தோற்கடித்துள்ளதற்கு எங்கள் இயக்கம் பாராட்டுகளை தெரிவிக்கிறது. அரசியலில் பணம், சாதி, மதம் என் அடிமைப்பட்டு கிடந்த இந்திய வாக்காளர்களை புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் ஆம் ஆத்மி கட்சி தனது கட்சி கொள்கைகளை ஊழலுக்கு எதிராக பரப்பி குறுகிய காலத்தில் புதுதில்லி மக்களின் தனி இடத்தை பிடித்துள்ளதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஆம் ஆத்மி கட்சி இது போன்று பல்வேறு வெற்றிகளை பெற்று இந்தியா ஊழல் இல்லாத நாடுகள் வரிசையில் முதல் 10 இடங்களில் வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். தாங்கள் இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஊழலுக்கு எதிராக அமைய வேண்டும். அப்துல்கலாம் கண்ட கனவான 2020-ல் நம் நாடு வளர்ந்த நாடுகளில் முதலிடத்தை பிடிக்க அது வழிவகிக்கும் என கடிதத்தில் வழக்குரைஞர் ஏ.குணசேகரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments