முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதியில் எம்.எல்.ஏ பாண்டியராஜன் திடீர் ஆய்வு

விருதுநகரில் அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதியில் சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On : 12 டிசம்பர், 2013 at 4:24 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:43 AM

விருதுநகரில் அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதியில் சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

விருதுநகர் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை மாணவர் விடுதியில் எம்.எல்.ஏ கா.பாண்டியராஜன், நகராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த விடுதியில் 100 மாணவர்கள் உள்ள விடுதியில் 88 பேர் தங்கி படித்து வருகின்றனர். ஏன் விடுதியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது என கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும்   காப்பாளரிடம் கேட்டறிந்தார். அதோடு, வருகை பதிவேடு, உணவு பதிவேடுகளை சரிபார்த்தார். அதையடுத்து, படுக்கை வசதிகள், மின்சாதனம் மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதா எனவும், உணவு சுகாதாரமான முறையில் தரமாக சமைக்கப்படுகிறதா என சமையல் அறைக்குச் சென்று பார்வையிட்டார்.

அரசு ஒவ்வொரு விடுதி மாணவருக்கும் மாதந்தோறும் ரூ.650 ஒதுக்கீடு செய்கிறது. இதன் மூலம் எந்த மாதிரியான உணவுகள் தயார் செய்யப்படுகிறது என்பதற்கான விவரங்களை சமையலரிடம் கேட்டறிந்தார். மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவு தரமாக இருக்கிறதா என்பதை சாப்பிட்டு சரிபார்த்தார். அதில், சிறு குறைகள் இருப்பதால் சரி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அதையடுத்து, மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, விடுதி காப்பாளர் நியமனம் செய்யும் படி கூறினார்கள். உடனே காப்பாளர் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ க.பாண்டியராஜன் உறுதியளித்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.