விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ஆதார் அட்டைக்கு கைரேகை, கருவிழி, புகைப்படம் எடுக்கும் பணி
அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் இரண்டாம் கட்டமாக ஆதார் அடையாள அட்டைக்கு கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் எடுக்கும் பணி டிச.14-ம் தொடங்கி, தொடர்ந்து 23-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.
அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் இரண்டாம் கட்டமாக ஆதார் அடையாள அட்டைக்கு கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் எடுக்கும் பணி டிச.14-ம் தொடங்கி, தொடர்ந்து 23-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி் குறிப்பு விவரம் வருமாறு: அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் நகராட்சி பகுதியில் குறிப்பிட்ட நாள்களில் எடுக்கப்பட இருக்கிறது. அருப்புக்கோட்டை நகராட்சியில் 4, 5,6,7 ஆகிய வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு இன்று தொடங்கி, தொடர்ந்து, 16-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.
அதேபோல், 12,13,14,15,1,23,25 ஆகிய வார்டுகளில் 14-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலும் உள்ளவர்களுக்கு தேவாங்கர் நடுநிலைப்பள்ளியிலும், 18,29,30,31 ஆகிய வார்டுகளில் 16-ம் தேதி முதல் 18ம் தேதி வரையில் தெற்கு தெரு தேவாங்கர் நடுநிலைப்பள்ளியிலும், 16,17 ஆகிய வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு அதே நாளில் இந்து நாடார் நடுநிலைப்பள்ளியிலும், 8,9,10,11 ஆகிய வார்டுகளில் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் கல்லுமடம் தேவாங்கர் நடுநிலைப்பள்ளியிலும், 21,22,23,24 ஆகிய வார்டுகளில் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரையில் விருதுநகர் சாலையில் உள்ள எம்.எஸ்.ஆர்.துவக்கப்பள்ளியிலும், 32,33,34 ஆகிய வார்டுகளில் பந்தல்குடி சாலை எஸ்.டி.ஆர்.என் மேல்நிலைப்பள்ளியிலும், 19,20,26,27,28 ஆகிய வார்டுகளில் விருதுநகர் சாலையில் உள்ள செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியிலும், 35,36 ஆகிய வார்டுகளில் அதே நாள்களில் வெள்ளைக்கோட்டை செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியிலும் கருவிழி, கைரேகை மற்றும் புகைப்படம் எடுக்கும் முகாம் நடைபெற இருக்கிறது. எந்த அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை முக்கிய ஆவணமாக இருக்கிறது.
Advertisement
அதனால், இதுவரையில் எடுக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எடுத்துக் கொள்ளலாம் பொதுமக்களை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.