ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொது மக்கள் கோரிக்கை
அரசின் உரிய அனுமதியின்றி ஊராட்சி பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டிய ஊராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை
அரசின் உரிய அனுமதியின்றி ஊராட்சி பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டிய ஊராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்டது காடனேரி ஊராட்சி. இதன் தலைவராக இருந்து வருபவர் ரகுநாதன். இங்குள்ள குடிநீர் ஊருணியைச் சுற்றி சுமார் 40 ஆண்டு காலத்திற்கும் மேல்பட்ட புளியமரம், வேப்பமரங்களை வியாழக்கிழமை ஊராட்சி நிர்வாகம் வெட்டியுள்ளது.அரசின் உரிய அனுமதியின்றி இந்த மரங்கள் வெட்டப்பட்டதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரங்கள் வெட்டப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து வருவாய் துறையினர் இது குறித்து விசாரணை நடத்துவதாகவும், அரசின் உரிய அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டிருந்தால் ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Advertisement