முகப்பு
தற்போதைய செய்திகள்

சாத்தான்குளத்தில் கூட்டுறவு சங்க உர விற்பனையாளர் படுகொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கூட்டுறவு சங்க உர விற்பனையாளர் மகாலிங்கம் இன்று பகல் கொலை செய்யப்பட்டார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கூட்டுறவு சங்க உர விற்பனையாளர் மகாலிங்கம் இன்று பகல் கொலை செய்யப்பட்டார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் செல்லையா என்பவர் மகன் மகாலிங்கம் (45). இவரது சகோதரர் சிவலிங்கம் என்பவர் கடைவீதியில் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு அருகே உள்ள கடை வர்த்தக சங்க தலைவர் பூபதி என்பவருக்கு சொந்தமானது. இவர்களுக்கு இடையே இடப் பிரச்னை தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், இவரது கடைக்கு அருகிலேயே இன்று மதியம் 1.30 மணி அளவில் சிலர் மகாலிங்கத்தைக் கொன்று சாக்கு வைத்து மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments