முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை

தூத்துக்குடி பிரையன்ட்நகர் 2-வது தெருவைச் சேர்ந்த காட்டுராஜா மகன் இன்பராஜ் (42). இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு நாகர்கோவில் சென்றிருந்தார். சனிக்கிழமை இரவு இவரது

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

 தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு  பூட்டியிருந்த 3 வீடுகளின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிச் சென்ற அடையைளாம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

 தூத்துக்குடி பிரையன்ட்நகர் 2-வது தெருவைச் சேர்ந்த காட்டுராஜா மகன் இன்பராஜ் (42). இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு நாகர்கோவில் சென்றிருந்தார். சனிக்கிழமை இரவு இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, மடிக் கணினி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்றனர்.

 இதேபோல, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சங்கரலிங்கம் மனைவி லட்சுமி (52) ,  பொன்ராஜ் ஆகியோர் வீடுகளிலும் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பொருள்களை திருடிச் சென்றனர். இருவரும் வெளியூரில் இருந்து வராததால் திருடப்பட்ட பொருள்களின் மதிப்பு தெரியவில்லை.

 அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.