பழனிக்கோவிலில் கார்த்திகை திருநாள் கூட்டம்
பழனி மலைக்கோவிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை வந்ததால் இலட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை திருநாளை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி மலைக்கோவிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை வந்ததால் இலட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் திரண்டனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மட்டுமன்றி ஐயப்ப சீசன் என்பதலால் ஏராளமான பக்தர்கள் மலைக்கோயில் வந்திருந்து அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். இதனால் மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப்கார் மற்றும் வின்ச் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.
மலைக்கோவிலிலும் கட்டண தரிசன வாயில், இலவச தரிசன வாயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய நின்றிருந்தனர். பக்தர்களுக்கு போதிய சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் குடிநீர் வசதிகள் திருக்கோவில் சார்பில் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆனது. மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. திருக்கோவில் சார்பில் 108 திருவிளக்கு பூஜையும் விமரிசையாக நடைபெற்றது.