தற்போதைய செய்திகள்

தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வலியுறுத்தி சி.ஐ.டி.யூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் பயன்பெறக் கூடிய நலவாரியங்களை சீர்க்குலைக்கும் நடவடிக்கை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்

எஸ். பாண்டியன்

தொழிலாளர்கள் பயன்பெறக் கூடிய நலவாரியங்களை சீர்க்குலைக்கும் நடவடிக்கை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ சங்கத்தின் மாவட்டத் தலைவர் அசோகன் தலைமை வகித்தார். இதில், தொழிலாளர்கள் பயன்பெறக்கூடிய நலவாரியங்களை சீர்க்குலைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியங்களில் 60 வயது பூர்த்தியானவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தாமதமாக பதிவு செய்வதை கண்டித்தும் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு வகையான 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர்.

இதில், இச்சங்கத்தைச் சேர்ந்த வட்டார நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT