முகப்பு
தற்போதைய செய்திகள்

காவலர் மீது மனைவி வரதட்சணைப் புகார்

பழனி தட்டான்குளத்தை சேர்ந்தவர் லியோனஸ் பிரேம்குமார்(50).  இவரது மகன் பிரதீப் செபாஸ்டின்(24).  இவர் சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல் படை 13ம் அணியில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

பழனியில் காவலரான கணவர் வரதட்சணைக் கொடுமை செய்ததாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழனி தட்டான்குளத்தை சேர்ந்தவர் லியோனஸ் பிரேம்குமார்(50).  இவரது மகன் பிரதீப் செபாஸ்டின்(24).  இவர் சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல் படை 13ம் அணியில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் அலவாக்கிபட்டியை சேர்ந்த ஜெயசுதா(31) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதால் கடந்த 19.8.2011ல் திருமணம் செயது கொண்டனர்.  இருவரும் பழனியில் கூட்டுக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில் செபாஸ்டின் ஜெயசுதாவிடம் 25பவுன் நகையும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் கேட்டு வரதட்சணைக் கொடுமை செய்துள்ளார். 

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் ஜேஎம் கோர்ட்டில் ஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸார் லியோனஸ் பிரேம்குமார், அவரது மனைவி சகாயசெல்வி(45), மகள் மோனிகா, பிரதீப் செபாஸ்டின் ஆகியோர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  மேற்படி புகார் பழனி அனைத்து காவல்நிலையத்துக்கு உட்பட்டதால் புதன்கிழமை வழக்கு பழனிக்கு மாற்றப்பட்டு பழனி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.